Elephant Conservation, Elephant Conservation in India, Africa, Asia. ElephantConservation.in

   
 
   
Media
 
   

 

 

 

 

 

 

 

 

 

 

 

   
 
   
Media
 
   

 

 

About Us Dijo Thomas Elephant Experiments Findings of Dijo Thomas NeelagiriKaduva Media

 

Report in Daily Thanthi, a prominent Tamil Nadu News Paper, on 03 Jun 2016 regarding the finding of NeelagiriKaduva, in Tamil Language

 

 

 

 

 

     
  தேசிய செய்திகள்
சிறுத்தை உருவம் –நாய் முகம் கேரள காடுகளில் ‘‘நீலகிரி கடுவா’’எனப்படும் புதிய புலிகள் கண்டுபிடிப்பு வனவிலங்கு ஆராய்ச்சியாளர் தகவல்
சிறுத்தை உருவம் –நாய் முகம் கேரள காடுகளில் ‘‘நீலகிரி கடுவா’’எனப்படும் புதிய புலிகள் கண்டுபிடிப்பு வனவிலங்கு ஆராய்ச்சியாளர் தகவல்

கடந்த 2014–ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், கேரள மாநிலத்தில் உள்ள நெய்யார் அணை அருகே, ஒரு புது வகையான புலிகள் வாழும் அறிகுறிகள் காணப்பட்டன. இதனை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 8–ந் தேதி திருச்சூர் மாவட்டத்தில் உள்ள காஞ்சனி வனப்பகுதியில் மேற்கண்ட அந்த புலிகளின் நடமாட்டம் தெளிவாக கண்டறியப்பட்டது. இந்த புதிய புலி இனத்தை, நீலகிரி கடுவா என்று அழைக்கலாம். இந்த நீலகிரி கடுவா புலி என்பது சிவப்பு நிறம் கலந்த, பழுப்பு நிறத்தில் இருக்கும்.
ஜூன் 03, 2016, 10:10 AM


கோவை,

கேரள காடுகளில் நீலகிரி கடுவா என்று அழைக்கப்படும் புதிய புலிகள் வசிப்பதாகவும் அவை சிறுத்தை உடலுடன் நாய் முகத்துடன் இருப்பதாகவும் கேரளாவை சேர்ந்த வனவிலங்குகள் ஆராய்ச்சியாளர் கூறினார்.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் வனவிலங்குகள் குறித்து ஆராய்ச்சி செய்து வருபவர் கொச்சியை சேர்ந்த டிஜோ தாமஸ். காடுகளில் முகாமிட்டு, தொடர்ந்து வனவிலங்குகள் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதால், சடை பிடித்த முடியுடன், சாமியார் போன்று காணப்படுகிறார். தனது ஆய்வு குறித்து அவர் கூறியதாவது:–

நீலகிரி கடுவா புலி

கடந்த 2014–ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், கேரள மாநிலத்தில் உள்ள நெய்யார் அணை அருகே, ஒரு புது வகையான புலிகள் வாழும் அறிகுறிகள் காணப்பட்டன. இதனை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 8–ந் தேதி திருச்சூர் மாவட்டத்தில் உள்ள காஞ்சனி வனப்பகுதியில் மேற்கண்ட அந்த புலிகளின் நடமாட்டம் தெளிவாக கண்டறியப்பட்டது. இந்த புதிய புலி இனத்தை, நீலகிரி கடுவா என்று அழைக்கலாம். இந்த நீலகிரி கடுவா புலி என்பது சிவப்பு நிறம் கலந்த, பழுப்பு நிறத்தில் இருக்கும். இது பார்ப்பதற்கு சிறுத்தை புலி போன்று காணப்படும். இதன் முகம் நாயைப்போன்று இருக்கும். உலகளவில் பெரிய பூனைகளின் இனம் என்று, சிங்கம், புலி, சிறுத்தை இனங்கள் அழைக்கப்படுகின்றன. இந்த வரிசையில் புது வகையான நீலகிரி கடுவா புலி, உலகின் 8–வது புலி இனமாக கருதப்படுகிறது.

கால் தடங்கள் பதிவு

இவற்றை கேரளாவில் நெய்யார் அணைபகுதியில் பலர் பார்த்து உள்ளனர்.வயநாடு, தட்டேக்காடு, மலம்புழா பகுதிகளில் இவை வசிக்கின்றன.இவற்றுக்கு மிகவும் பிடித்த உணவு நாயின் மாமிசம் ஆகும்.நாய் வேட்டைக்காக இவை குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவதுண்டு.சில மாதங்களுக்கு முன்பு நெய்யாறு அணைபகுதிக்கு வந்த இந்த நீலகிரி கடுவாயை தங்களை தாக்க கூடும் என்று கருதிய பொதுமக்கள் அதை அடித்து கொன்று விட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.மிகவும் குறைந்த எண்ணிக்கையிலிருக்கும் இவை மேலும் அழிந்து போகாமல் காக்க வேண்டும்.இவை மனிதனுக்கு எந்த தொந்தரவும் செய்யாது.

எனவே இந்த புலிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள இவை வசிக்கும் காட்டுக்குள் செல்ல எனது தலைமையிலான 12 பேர் குழுவுக்கு அனுமதி அளித்தால் இந்த புலி குறித்து புகைப்படத்துடன் கூடிய தகவல்களை திரட்ட முடியும். இதன் மூலம் உலகம் முழுவதும் இந்த அரிய வகை புலிகள் குறித்து அறிய முடியும்.

ஏற்றுக்கொள்ளவில்லை

கடந்த 2016–ம் ஆண்டு ஜனவரி மாதம் மைசூர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில், இந்த புது புலி இனம் குறித்து ஆய்வு கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த புது இனத்தின் கால் தடம், புலியின் தடத்தை போன்று உள்ளது. கால் நகங்களின் தடம் நன்கு பதிவாகி தெரிகிறது. இந்த கால் தடங்கள் காஞ்சனி பகுதியில் பதிவாகி உள்ளது கண்டறியப்பட்டு புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த அரிய இனம் குறித்த தகவல்களை கேரள வனத்துறை ஏற்றுக்கொள்ளவில்லை.ஆதார பூர்வமான தகவல்கள் இல்லை என்று கூறி இதை மறுக்கிறது.எனது ஆய்வுக்கு வழி ஏற்படுத்தி கொடுத்தால் இந்த புலி குறித்தான உண்மைகளை நிரூபிப்பேன்.

காட்டுயானைகள் திரும்பிச்செல்லும்

மேலும் காட்டு யானைகளின் மன நிலைகுறித்தும் நான் ஆய்வு மேற்கொண்டு வருகிறேன்.இவைகளுக்கு மனிதர்களின் மனநிலையை புரிந்து கொள்ளும் அதீத சக்தி உள்ளது. தன்னை தேடி வரும், மனிதர்களின் மனநிலையை பல கி.மீட்டர் தூரத்தில் இருந்தாலும் உணர்ந்து கொள்ளும் சக்தி படைத்தது. அப்போது அந்த மனிதர்கள் தன்னை தாக்கும் நோக்கில் வருகிறார்களா? அல்லது பாசத்துடன் பார்க்க வருகிறார்களா? என்பதையும் யானைகள் புரிந்து கொள்ளும். மனிதர்களின் உள் மன ஆற்றலை உணர்ந்து கொண்டு, அதற்கேற்ப தனது செயலை மாற்றி அமைக்கும் குணம் யானைகளுக்கு உண்டு. இந்த வகையில், மனிதர்களை தாக்கும் நோக்கில் வருகிற காட்டுயானைகளை ‘‘மைண்ட் வாய்ஸ்’’ மூலம் நிற்க வைத்து, திரும்பி போகச்செய்யும் கலையை நடைமுறைப்படுத்தி வருகின்றேன். இதற்கான ஆய்வுக்கட்டுரையை தயார் செய்து வருகின்றேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

 
     

 

 

 

Back to Media Reports

 

 

About Us Dijo Thomas Elephant Experiments Findings of Dijo Thomas NeelagiriKaduva Media
 

 

A few of the Newspaper Reports during the NeelagiriKaduva attack in Neyyar Dam in Sep 2014 - Click Here
 

 

www.WildlifeConservations.com

 

Copyright 2010 @ www.WildlifeConservations.com